கண்கள் மயங்கிய போது...  

                                     

    

       “இல்லைங்க இந்த குழந்தை இனியும் இருக்கக் கூடாது இது ஒரு கறுப்பு முத்திரை! இதை அழிச்சாதான் எனக்கு நிம்மதி!”

     “அப்புறம் உன் விருப்பம்.”

     “ஐயா... உங்களை பெரியவர் கூப்பிடறார்!” வேலைக்காரன் வந்து சொன்னான்.

     கார்த்திக், சோமசுந்தரத்தின் அறைக்குப் போய் “என்ன மாமா...?” அவர் இன்னமும் படுக்கையில்தான் கிடந்தார். உடம்பு பஞ்சையாகிப் போயிருந்தார்.

     “என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளே...”

     “மாமா! என்ன இது சின்ன பிள்ளையாட்டம்! கையை விடுங்க! மனசை போட்டு அலட்டிக்காம பேசாம ரெஸ்ட் எடுங்க!”

     “மாப்பிளை! நாங்க உங்களுக்கு துரோகம் பண்ணிட்டோம்.”

     “துரோகமா... சேச்சே! எல்லாம் தெரிந்துதானே கல்யாணம் பண்ணினேன்!”

     “ஆனால் இந்த கர்ப்பம்...?”

      “சிசு வளரட்டும், என் குழந்தை மாதிரி வளர்ப்போம். வெளியே தெரிந்தால் அசிங்கமாய் போகுமே என்று பயப்படுகிறீர்களா... குழந்தை எட்டு மாதத்திலேயே பிறந்து விட்டது என்று சொல்வோம்.”

     “மாப்பிள்ளை! நீங்க மனுஷன் இல்லை தெய்வம்!”

     “சேச்சே... என்ன மாமா நீங்க...”

     “மாப்பிள்ளை, இந்த குழந்தை வேணாம்னு நினைக்கிறேன். ரதியை கூட்டிட்டுப் போய் கலைச்சிடுங்களேன்.”

     “உங்க எல்லோருடைய விருப்பமும் அதுதான்னா. நான் அதுக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை!”

     ரதிலாவின் வயிறு கழுவப்பட்டது. அவள் அதை மறக்க முடியாமல் சிரமப்பட்டாள். இடையில் மெல்ல மெல்ல கலகலப்பிற்கு மாறிக் கொண்டு வந்தவள் இந்த சம்பவத்திற்குப் பிறகு மறுபடியும் மூடியாகிப் போனாள்.

     அவள் வீட்டிற்குள் நடைபிணமாய் நடக்க ஆரம்பித்தாள். அவளை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்து விட்டான் கார்த்திக். அவனுடைய முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.

     அவளை பார்த்து பார்த்து சோமசுந்தரத்தின் உடல் நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. அவருக்கு அவர் மேலே நம்பிக்கை குறைந்துகொண்டிருந்தது. தான் இன்னும் எத்தனை நாட்களுக்கோ என்று அவர் எண்ண ஆரம்பித்தார்.

     நாம் தவறு செய்து விட்டோம். ரதிலாவிற்கு சுதந்திரம் கொடுத்தது முதல் தவறு. அடுத்த தவறு அவளுக்கு திருமணம் செய்து வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்காமல் நாம் முன்பே கண்களை மூடியிருக்க வேண்டும்.

     இத்தனை சொத்து சுகம் இருந்து என்ன பயன், நிம்மதி இல்லையே! சந்தோஷமில்லையே! எதையும் அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒன்று மாற்றி மாற்றி வருகிறதே!

     கார்த்திக் நல்லவன், வல்லவன், திறமைசாலி. அவன் நமக்கு மருமகனாக வாய்த்தது நம் பாக்கியம். என்னதான் அவன், ரதியை அன்புடன் ஏற்றுக்கொண்டாலும் கூட இது அவனுக்கும் ஒரு தண்டனை போல்தான்.

     நாம் அவனை தண்டித்துவிட்டோம். இத்தனையையும் தாங்கிக் கொண்டு அவன் எதுவுமே நடக்காதது போலிருக்கிறான். நமக்கே இத்தனை சங்கடம் என்றால் அவன் உள்ளுக்குள் எத்தனை பாடுபடுவான். அவனுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அதுவும் சாவதற்குள் அப்போதுதான் நம் ஆத்மா சாந்தியடையும்.

     அவர் ஒரு முடிவுக்கு வந்து வக்கீலை வரவழைத்து தன் சொத்து, தொழிற்சாலை, பிசினஸ், வீடு எல்லாவற்றையும் கார்த்திக்கின் பேரில் எழுதிவைத்தார். சொன்னால் எங்கே அவன் மறுத்துவிடப் போகிறானோ என்று அவர் அவனிடம் இது பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

     அதை எழுதின பின்புதான் அவருக்கே நிம்மதி பிறந்தது.

     அன்று.

     வெளியூரில் ஒரு கல்யாணம் இருந்தது. அதற்கு கார்த்திக்கும் ரதிலாவும் கிளம்பிப் போயினர். கல்யாணத்திற்கு போக வேண்டும் என்பதைவிட, அவளை எங்காவது வெளியே அழைத்துப் போக வேண்டும் என்பதற்காகவே அவன் கிளம்பியிருந்தான்.

     ரதிலா இயல்பிலேயே அழகானவள். அவளுடைய முகமும். உடலும், உருவமும் வார்த்த மாதிரி அவன் மனதில் பதிந்து விட்டிருந்தன. அழகு என்பது ஒரு வரப்பிரசாதம். எத்தனையோ பெண்கள் தாங்கள் அழகில்லையே நமக்கு பல் தெற்றியிருக்கிறதே., மூக்கு நீளம், கன்னம் ஓட்டல், காது மடிந்திருக்கிறது, முடி குறைவு, நிறமில்லை என்று ஏங்குகிறார்கள்.

     ஆனால் இவளுக்கு எல்லாமே பொருத்தமாய் அமைந்திருக்கிறது. அப்படியிருக்கும் போது அதை வைத்து சந்தோஷப்படாமல் இவள் உம்மணா மூஞ்சியாகவே இருக்கிறாள். தன்னை கவனிக்காமல் அழகை கெடுத்துக் கொள்கிறாள்.

     இவளை முற்றிலும் மாற்ற வேண்டும். இவள் கவலையை அடியோடு போக்க வேண்டும். முதலில் இவளுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். என்றுதான் அவளையும் அழைத்துப்போனான்.

     கல்யாண வீட்டில் மற்றவர்களுடன் அவளை கலக்க விட்டு, அவள் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்தான் அவள் பிறருடன் சந்தோஷமாய் பேசுவதைப் பார்த்து அவனும் சந்தோஷப்பட்டான்.

     அவளுக்கும் மனது லேசான மாதிரியிருந்தது. திரும்பும் போது “எனக்கு அந்த மீனா கட்டியிருந்த சேலையை வாங்கித் தருவீர்களா?” என்றாள்.

     “மீனாவோட சேலையையா... கேட்டா அவள் தருவாளா?”

     “சீ! அது மாதிரின்னேன்.”

     “இப்போதான் ரதி நீ நிஜமான பொம்பளை! அடுத்தவளின் சேலையைபோல எப்போ நீயும் கேட்கிறாயோ... அப்போதான் நீ யதார்த்தமான பொம்பளையாகிறாய் வா! இப்பவே வாங்கிக்கொள்!”

     துணிக்கடையில் ரதிலா, நான்கு புடவைகள் எடுத்தாள் (நான்கே மணி நேர தேடல்தான்!) “ரதிலா! நீ எப்பவும் இதே மாதிரி சந்தோஷமாயிருக்கணும். அதுதான் என் விருப்பம் செய்வாயா?”

    “சரிங்க!”

     அவர்கள் மலர்ச்சியுடன், சந்தோஷத்துடன் வீட்டுக்கு திரும்பினபோது அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.

     சோமசுந்தரம் இயற்கை எய்தி இருந்தார்.

     அப்பா இறந்த அதிர்ச்சி ரதிலாவை சில நாட்களுகுக் பாதிக்கவே செய்தது. அவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. அவருடைய உடல் நிலை கெடுவதற்கும், அவர் இத்தனை சீக்கிரம் இறப்பதற்கும் தான் தான் காரணம் என்பது அவளுக்கும் புரிந்தது.

     அந்த உறுத்தல் அவளை பாடாய் படுத்திற்று.

     அதைவிட அதிகமாய் அவளை வேறு ஒரு விஷயமும் உறுத்த ஆரம்பித்திருந்தது. அது கார்த்திக்கிடம் தோன்றியிருந்த திடீர் மாறுதல்! மாமனார் இறந்த பின் அவன் போக்கே சரியில்லை.

     அவன் அவளை கண்டுகொள்வதே இல்லை. முன்பு போல அவளை கொஞ்சுவதில்லை. மதியம் சாப்பிட வருவதில்லை. ராத்திரிகளில் லேட்டாய் வர ஆரம்பித்தான். குடிக்கவும் செய்தான். அவள் ஏதாவது கேட்டால் எரிந்து எரிந்து விழுந்தான்

     “ஏங்க உங்களுக்கு என்னாச்சு... ஏன் இப்படி குடித்து உடம்பை கொடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று கெஞ்சுவாள். அவன் அவளை சட்டை செய்யமாட்டான் பேசவே மாட்டான்.

     ஏங்க மவுனமாகவே இருந்து என்னை கொல்றீங்க! உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க, நான் செத்துப்போறேன். நீங்க வேறு கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமா... உங்க சந்தோஷம்தாங்க என் சந்தோஷம்.”

     அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போது வரலட்சுமி காபி எடுத்துக்கொண்டு அறைக்குள் வர, “முதலில் இந்த கிழவியை ரூமை விட்டு விரட்டு!” என்று கத்தினான்.

     “கொஞ்சம் கூட மேனர்ஸ் கிடையாது. மருமகன் இருக்கிறனே என்று பிரைவேஸி கொடுப்பதில்லை.”

     அவன் அப்படி அலறுவான் என்று தாயும் எதிர்பார்க்கவில்லை. மகளும் கூட. அவர்கள் அப்படியே அடிப்போனார்கள். வரலட்சுமி காபியை வைத்துவிட்டு விறுவிறு என்று வெளியேறினாள்.

     அதன் பிறகு அவள் அவன் கண் முன்னிலையிலேயே வருவதில்லை தன் அறைக்குள்ளேயே அடங்கிக் கிடந்தாள்.

     “எம்மேலே கோபம்னா அதுக்கு என்னை அடிங்க? உதைங்க! அதுக்கு எதுக்காக எங்கம்மாவை... அவங்க என்ன தப்பு பண்ணாங்க?”

     “ஏய் என்னை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுகிறாயா?”

     அதன் பிறகு அவளும் அவனிடம் பயந்து பயந்துதான் பேசினாள். அவனுடைய மாற்றம் அவளை பயமுறுத்திற்று. எத்தனை அன்பாய் பழகினவன் ஏன் இப்படி மாறினான் என்று அவள் புரியாமல் குழம்பினாள்.

     அவன் வீட்டில் மட்டுமில்லை, ஆபீசிலும்கூட மாறித்தான் போனான் என்பதை மானேஜர் வந்து தெரிவித்தார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles