இனி ஆரம்பம்
  வாசல்
 

 "தமிழோடு உயர்வோம்              

                                       ...தமிழராக"

ein Bild

 

எனது வலைதளபதிவினை கீழ்காணும் புதிய தளத்திற்கு மாற்றியுள்ளேன். தொடர்ந்து பாருங்கள். உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  -     நன்றி : பாண்டித்துரை

 

http://pandiidurai.wordpress.com/

உங்களின் கருத்துக்கு: pandiidurai@yahoo.com

_____________________________________________________

ஜீன் 30-07

சிங்கப்பூர் வருகை தரும் எழுத்தாளர் திரு பிரபஞ்சன் அவர்களுடனான சந்திப்பு  ஜீலை 7 மற்றும் 8 ம் தேதியில் நடைபெறுகிறது இந்நிகழ்வு பற்றிய முழுமையான விபரம் திண்ணை இணையத்தில் வெளிவந்துள்ளது.

அதன் இணைப்பு உங்களுக்கா.

பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பு

****************

இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !!

   சிறுகதை - “பாண்டித்துரை”

 

  நேற்றுத்தான் முன்னாவை பார்த்தேன்ரொம்பவும் சந்தோசமாக இருந்தான். (ஊரில் முனுசாமி சிங்கப்பூர் வந்தபின்னாடி முன்னாவாகிட்டான்).

  

  சிவாஜி படத்தை மூனு தடவைப் பார்த்துவிட்டு  அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

  

 நீ என்னதான் சொல்லு சங்கரை அடிச்சுக்கவே முடியாதுப்பா! முதல் காட்சியிலேயே தலைவரு  என்னம்மா வர்றாரு தெரியுமாவாஜி வாஜி ..ன்னு வந்து படம் முடியற வரைக்கும் சும்மா கலக்கிட்டாரு ... வாஜி வாஜி...

  

 சாலையில் போயிட்டு இருக்கிற  எல்லாரும் எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அமைதியாக நடையைத் தொடர்ந்தோம்.

  

  எப்படா மாப்ஸ் நீ சிவாஜியைப் பார்க்கப் போறேன்னு என்னைக் கேட்டான்.

  

  பதினைஞ்சு வெள்ளியைக் கொடுத்துப் பார்க்க வசதியில்லை தேக்காவில் ஐந்துவெள்ளி குடுத்து டிவிடி யில தான் பார்க்கலாம் என்று இருக்கேன், என்றேன் நான்.

 

  நீ திருந்தவே மாட்டியாடா. ஓவர் டைம் பணத்தை எல்லாம் என்னடா மாப்ஸ் பண்ற  கொஞ்சமாவது செலவு பன்னுங்கடா என்றான்.

  

 ஒரு விசயம், நான் இன்னைக்கு மறுபடியும் பிளாசா போறேன் சிவாஜி படம் பார்க்க. கேத்ரீனா, வந்தனா, சுப்புலெட்சுமி எல்லாம் வர்றாங்க நீயும் வர்றியா?  என்றான்.

  

  இவங்களை எல்லாம் மாதத்தில்  இரண்டு, மூனு நாள் முன்னா கூட பார்க்கலாம். எனக்கும் அவங்க நண்பர்கள் தான். ஆனால் அவங்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையே நான் திரும்பிப் பார்த்துக்க வேண்டியிருக்கும்வேற ஒன்னும் இல்லை பர்சு இருக்கான்னு தான்.

  

   சீனத் தோழி கேத்ரீனா என்னை "சிட்டி" என்றுதான் அழைப்பாள் .ஏன்னா  சிதம்பரம் என்கிற பேரு அவளுக்கு கூப்பிட வரலையாம். கேத்ரீனா "சிட்டி, எங்களையெல்லாம் கலட்டிவிட்டுட்டு, நீ எப்பவும் தனியா போறியே லவ் ஏதாவது இருக்கிறதா என்றாள்! "

  

  கேத்ரீனாவுக்கு நம்ம ஊருக் கதையெல்லாம் தெரியும்.  எங்க கூடசேர்ந்து தமிழ்ப்படம் பார்த்து நல்லாவே புரிஞ்சுக்கிறா! நானும் நிறைய சொல்வேன்.

  

  முன்னா தோழிகளில் கேத்ரீனா மட்டும் தான்  என்கிட்ட நல்லா பேசுவா.

  அவளே போன் பண்ணி பல சமயம் மணிக்கணக்கா பேசுவாஅப்பவெல்லாம் முன்னா கேப்பான், “என்ன மாப்ஸ் லவ்வா? அப்புறம் எங்க அத்தைக்கு யாரு பதில் சொல்றதுன்னு”  கிண்டல் பண்ணுவான்.

கதை தொடர்ச்சி- 1

  

 

 
  Today, there have been 1 visitatori (16 hits) on this page!  
 
=> Vuoi anche tu una pagina web gratis? Clicca qui! <=